Skip to main content

"சவுண்ட் பார்ட்டி மார்க்கண்டேயன்... சத்தமில்லாமல் சாதித்த சின்னப்பன்..!" 

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 

இடைத் தேர்தல் நடக்கும் விளாத்திகுளம் தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு தான் 'சீட்' என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த ரேசில் மாஜி எம்.எல்.ஏ சின்னப்பன் முந்திக் கொண்டு சீட் வாங்கிவிட்டார். இதுகுறித்து கட்சிக்காரர்கள் சிலரிடம் பேசினோம். 


 

markandeyan




 "இவரு வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தானே? பேசியே காரியத்தை கெடுத்துப்புட்டார். அருமையா ஜெயிக்க வேண்டிய தொகுதியை இழுபறி நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் என அவர்கள் ஆற்றாமையுடன் பேசினர். தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னே நவம்பர் மாதத்திலேயே தொகுதி பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோரை நியமிச்சாங்க. கடம்பூராருக்கும் இவருக்கும் (மார்க்கண்டேயன்) ஆகாது. கடம்பூர் ராஜூவோ, மணல் திருடி விற்பனை செய்பவர்களுக்கு எல்லாம் சீட் கிடையாது என, மார்க்கண்டேயனை குறிவைத்து பேச, பதிலுக்கு தினகரன் அணியின் சிலீப்பர் செல் தான் கடம்பூர் ராஜூ என்று எதிர்பாய்ச்சல் பாய்ந்தார் மார்க்கண்டேயன். இது கட்சிக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்த, ஓபிஎஸ் தலையிட்டு அப்போது பிரச்சனையை தீர்த்து வைத்தார்.


 

admk




அதன்பிறகும் சும்மா இருந்தாரா? ஓட்டப்பிடாரம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வந்த எஸ்.பி.வேலுமணிக்கு, இவர் தூத்துக்குடி டோல்கேட்டுக்கு இந்த பக்கமும், அப்ப மாவட்ட செயலாளராக இருந்த சி.த.செல்லப்பாண்டியன் தரப்பு டோல்கேட்டுக்கு அந்தப்பக்கமும் தனித்தனியா வரவேற்பு கொடுத்து கட்சியோட மானத்தை வாங்கினார்கள். அதற்கு பிறகு, புதூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் சின்னப்பனை மேடையில் பேசவிடாமல் செய்வதற்காக, தனது ஆட்களை தூண்டிவிட்டு அடிதடி ரகளையில் இறங்கினார். இதையெல்லாம் கட்சியோட தலைமைக்கு தெரிஞ்சும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஆனால், அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்தாங்க. இப்ப சின்னப்பனுக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள்" என்று விளக்கினர்.



 

   ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் சப்போர்ட் இருக்குதுன்னு மார்க்கண்டேயன் தனி ஆவர்த்தனம் பண்ணிகிட்டு இருந்தார். இப்படியே போனால் இவரை கையில் பிடிக்க முடியாது. ஓபிஎஸ் கை ஓங்கிவிடும் என கருதியே, கடம்பூரார் சிபாரிசு பண்ணிய சின்னப்பனுக்கு சீட் கொடுத்திருக்காராம் இபிஎஸ்.  "கடந்த முறை அம்மா நிறுத்திய உமா மகேஷ்வரியை, 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தேன். இந்த முறை கட்சித் தலைமை யாரை நிறுத்தினாலும், அவரை ஜெயிக்க வைப்போம். ஆனால், கடம்பூர் ராஜூவை தேர்தல் பொறுப்பாளராக போட்டதை ஏற்க முடியாது. ஒரு சலவை தொழிலாளியை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை ஜெயிக்க வைப்பேன்" என்று விளாத்திகுளம் கட்சிக் கூட்டத்தில் முன்பு உரையாற்றினார் மார்க்கண்டேயன். சொன்னதை செய்வாரா மார்க்கண்டேயன்?

 


 

சார்ந்த செய்திகள்