நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் எதிர் கட்சி அந்தஸ்த்து பெரும் வாய்ப்பை இழந்தது.பாஜகவும் எந்த கட்சிக்கும் எதிர் கட்சி அந்தஸ்த்தை வழங்கவில்லை. இதனால் காங்கிரஸ் தலைமை பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இது இந்திய அளவில் ட்ரெண்டானது.
TAG2 ---------------------------
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி களுக்கு பதவி பிரமாணம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, மேசையைத் தட்டி பாராட்டினார் பிரதமர் மோடி. ஆனால், அந்த எம்.பி-யை அழைத்து சோனியா காந்தி, இந்தியில் பதவி ஏற்ற கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிகுன்னில் சுரேசை மலையாளத்தில் பதவிப்பிரமாணம் செய்யாமல், ஏன் இந்தியில் செய்தீர்கள் என கடிந்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. தாய்மொழியில் பதவி ஏற்க முடியாதா? என்றும் கேள்வி எழுப்பினார்.