மோசடி வழக்கில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்று வெளியேவந்தார். அப்போது, ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் 60 கார்கள் புடை சூழ அவரை வரவேற்றனர்.
இதனை அறிந்த சசிகலா, அவரைத் தன் பக்கம் கொண்டுவரும் ஆர்வத்துக்கு வந்தார். அதனால், அவருக்கு நெருக்கமான ஒரு நபரிடம், அவரைப் பயப்பட வேணாம்னு சொல்லுங்க. நான் அவருக்கு ஆதரவா இருப்பேன் என்பதை அவரிடம் சொல்லுங்க. அவரை என் லைனுக்கு வந்து என்னிடம் பேசச் சொல்லுங்கன்னு சொல்லி இருக்கார். இதைக்கேட்ட ராஜேந்திர பாலாஜி, அவர் சங்காத்தமே வேணாம்டா சாமின்னு கையெடுத்துக் கும்பிட்டதோட, அவரிடம் இருந்து வந்த போனையும் எடுக்க மறுத்திட்டாராம். இந்த நிலையில் உ.பி. தேர்தலில் பா.ஜ.க. தோற்கும் என்று எதிர்பார்க்கும் சசிகலா, அதன்பின் டெல்லியின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பும். அப்ப, என்னைச் சேர்த்துக்கச் சொல்லி அ.தி.மு.க.வுக்கு அது பிரஷர் கொடுக்கும். அதுவரை அமைதியாக இருப்போம்னு கணக்குப் போட்டு இருப்பதாகவும் அவரது ஆதாரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.