Published on 23/05/2019 | Edited on 23/05/2019
![edappadi palanisamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/PcQ9UI91GfC1ijb6uPsZm5LUmVDqHihIChJpjTcNzpU/1558596542/sites/default/files/inline-images/edappadi%20palanisamy%20333_0.jpg)
சேலம் மக்களவை தொகுதியில் நான்காவது சுற்று முடிவில் அதிமுகவை விட திமுக வேட்பாளர் பார்த்திபன் 29637 வாக்குகள் பெற்று, தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
நான்காவது சுற்றில் திமுக வேட்பாளர் பார்த்திபன் 27703 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 21504 வாக்குகளும், அமமுக வேட்பாளர் செல்வம் 2839 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
நான்காவது சுற்றில், அதிமுகவை விட திமுக 6199 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
இதுவரையிலான நான்கு சுற்றுகளின் முடிவிலும் திமுக, அதிமுகவைக் காட்டிலும் 29637 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.