விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதியில் 3,227 வாக்குச்சாவடி மையம் உள்ளது. அனைத்து முன்னேற்பாடுகளும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 364 வாக்குசாவடிகள் பலவீனமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளன. 1497 வாக்கு மையத்தில் வெப்கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகின்றன.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டு அவர்கள் இப்போது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குசாவடி மையத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். வாக்குச்சாவடி மையத்தில் 15,563 அரசு ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். மொத்தத்தில் தேர்தலில் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேரை காவல்துறை உள்ளிட்டவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீல்சேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் 8 படை வரவழைக்கப்பட்டுள்ளன.
வாக்கு பதிவு நடைபெறும் மையத்தில் வாக்கு இயந்திரம் பழுதானல் உடனடியாக மாற்று இயந்திரம் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு சட்டமன்ற ரீதியாக 25% மின்னணு இயந்திரங்கள் கூடுதலாக வைத்துள்ளோம். மையத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கண்ட்ரோல் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் செய்தியார்களிடம் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.