Skip to main content

எஸ்.வி.சேகரை பாஜக ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; நாம் அவரை பெரிய ஆளாக உருவாக்க வேண்டாம்: காமராஜ் பேட்டி 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

 

பாஜகவில் உழைத்து வரக்கூடிய தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் எஸ்.வி.சேகர் இதுபோல் தட்டு தடுமாறி பேசி வருவது பிஜேபிக்கு ஒரு கரும் புள்ளியாக இருக்கிறது" என்கிறார் அமைச்சர் காமராஜ்.

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. அந்த முகாமை துவக்கி வைத்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அங்கு வந்திருந்த அனைவருக்கும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனையையும் துவக்கி வைத்தார். அங்கு மருந்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்.

 

அதனை தொடர்ந்து கொட்டையூர் கிராமத்தின் சாலையோர வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளர்களுக்கு முக கவசம் வழங்கி வேலை சேய்யும் போதும் முககவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய பழகுங்கள் என அறிவுரை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் காமராஜ், "கரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.  திருவாரூர் மாவட்டத்தில் 1,851 பேரில் 1,659 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். அதேபோல தமிழகத்தில் 78.55, சென்னையில் 86.45 சதவீதம் பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்'' என்றவர்.   

 

எஸ்.வி.சேகரின் விவகாரத்திற்கு வந்தார், "எஸ்.வி.சேகர் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு ஜெயலலிதா பிரச்சாரம் செய்து இரட்டையிலை சின்னத்தில் வெற்றிபெற வைக்கப்பட்டவர். அன்றைக்கும் கட்சியின் பெயர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் அவர் தற்போது கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதிமுகவினர் மட்டும் அல்ல தமிழக மக்கள் கூட மன்னிக்கமாட்டார்கள். 

 

அதிமுகவில் இருந்து பிஜேபிக்கு போய்விட்டதாக எஸ்வி சேகர் தெரிவித்தாலும், பிஜேபி கட்சியினர் எஸ்.வி. சேகர் பிஜேபியில் இருப்பதாக சொல்லவில்லை. பிஜேபியில் உழைத்து வரக்கூடிய தலைவர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எஸ்.வி.சேகர் இதுபோல் தட்டு தடுமாறி பேசி வருவது பிஜேபிக்கான  கரும்புள்ளி.

 

புதிய கல்வி கொள்கையில், மத்திய அமைச்சர் இது இந்தி திணிப்பு கிடையாது அந்தந்த மாநிலங்களிலே அவர்கள் விரும்புகிற அளவிள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சொல்லிவிட்டார். எஸ்.வி.சேகர் என்ன மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியா? அல்லது பிரதமரா, பிஜேபி கட்சி எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாகவே ஏற்று கொள்வதாக தெரியவில்லை. ஆக நாம் எஸ்.வி. சேகர் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்