Skip to main content

திருச்செந்தூரில் சீரமைப்பு பணிகள்; அமைச்சர் நடவடிக்கை

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

Rehabilitation works at Tiruchendur; Ministerial action

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். வெறும் 300 வீடுகளுக்கு மட்டும் இணைப்பு கொடுத்ததால் அனைத்தும் அடைத்துக் கொண்டது. 

 

இப்பொழுது மீண்டும் சுத்தம் செய்து புதிதாகப் பணி முடிவடைய இரண்டு மாதங்கள் ஆகும். அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்க கூறியுள்ளோம். இரண்டு குளங்களை சரி செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். கழிவு நீர் நேரடியாக ஊருக்கு வெளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

 

குப்பைகளை அள்ளுவது, சந்தை விரிவாக்கம், பேருந்து நிலையம் விரிவாக்கம், தகன மேடை புதிதாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைக் கொடுத்துள்ளார்கள். புதிய கழிவறைகள் அமைப்பதற்கான கோரிக்கையினையும் கூறியுள்ளார்கள். அனைத்தையும் செய்து கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளோம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்