இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. இதில் 2 தொகுதியில் அதிமுகவும், 2 தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான பாமகவும் போட்டியிடுகின்றன. அந்த தொகுதிகளும், வேட்பாளர்களின் விபரங்களும்.

அரக்கோணம் (தனி) – சு.ரவி, சிட்டிங் மாவட்டச் செயலாளராக உள்ளார். 2011 முதல் 2020 வரை எம்.எல்.ஏ இருந்தவருக்கு, மூன்றாவது முறையாக சீட் வழங்கப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டை – சுகுமார். ஒப்பந்ததாரரான இவர், முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தார், பின்னர் தமாகாவில் இருந்தார். தற்போது அதிமுகவில் உள்ளார். இவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

ஆற்காடு – இளவழகன். இந்த தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ இவர். மீண்டும் இவருக்கு சீட் வழங்கியுள்ளது. மாநில துணைச் செயலாளர்களுள் ஒருவராக உள்ளார்.
சோளிங்கர் - இந்த தொகுதிக்கு இன்னும் பாமக வேட்பாளரை அறிவிக்கவில்லை.