Skip to main content

திமுக வெற்றி உறுதி... துரைக்கண்ணு ஆதரவாளர்கள் வேதனை...!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

DMK guarantees victory  Duraikkannu supporters suffer
                                                        வைத்தியலிங்கம்

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் நம்பிக்கை பாத்திரமாக இருந்தவர் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு. அவரது குடும்பத்தினரையும், அவரது ஆதரவாளர்களையும் கட்டம் கட்டி புறக்கணித்து வருவதாக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மீது கடுகடுக்கின்றனர் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள். துரைக்கண்ணுவின் படத்தையும், பெயரையும் ப்ளக்ஸ் பேனரிலோ, போஸ்டர்களிலோ இருக்கக் கூடாது என்று அதிரடி கட்டளையாகவே விதித்தனர். தற்போது வேட்பாளர் பட்டியலிலும் கட்டம் கட்டிவிட்டார் என்கிறார்கள் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள்.

 

மேலும், “துரைக்கண்ணுவின் குடும்பத்தினர் ஒருவருக்குத்தான் மீண்டும் பாபநாசம் தொகுதி வழங்கப்படும் என்று நம்பியிருந்த நிலையில், ஒன்றியச் செயலாளரான கோபிநாதனுக்கு வழங்கி அமைச்சரின் குடும்பத்தினரையும், எங்களையும் அதிர்ச்சி அடைய செய்துவிட்டார்” என்கிறார்கள் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள். அக்டோபர் 13ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு சென்னையில் இருந்து காரில் சென்ற முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு, திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவந்தார். 

 

DMK guarantees victory  Duraikkannu supporters suffer
                                                                ரெங்கசாமி

 

அக்டோபர் 31ஆம் தேதி இரவு துரைக்கண்ணு இறந்துவிட்டதாக அதிமுக தலைமை வெளியிட்டது. இதற்கு இடையில் கட்சி மேலிடத்திற்கு சொந்தமான 800 கோடிக்கும் அதிகமான பணத்தை துரைக்கண்ணு குடும்பத்தினரிடம் இருந்து மீட்கும் அதிரடியும் நடந்தது. அதன் பிறகு துரைக்கண்ணுவின் உடல் நவம்பர் 1ஆம் தேதி பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மூன்றாவது முறையாக தொடர்ந்து எம்எல்ஏவாக வெற்றிபெற்ற துரைக்கண்ணு, விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் வேளாண்மை துறை எனும் பொன் முட்டையிடும் இலாக்காவைக் கொடுத்தார் ஜெயலலிதா.

 

அந்த தேர்தல்வரை ஓங்கியிருந்த வைத்தியலிங்கம், அந்த தேர்தலில் தோற்றதால், துரைக்கண்ணுவின் கை ஓங்கியது. அப்போதிலிருந்தே முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கும், துரைக்கண்ணுவிற்கும் இடையே உரசல் மூண்டது. இதற்கிடையில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ரெங்கசாமி அமமுகவிற்கு சென்றதும், அதுநாள்வரை பாபநாசம் ஒன்றியச் செயலாளராக இருந்த துரைக்கண்ணு, மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் கைப்பற்றி, தனது ஆதரவாளர்களை ஒன்றிய நகர பொறுப்புகளில் நியமித்தார். டெல்டா மாவட்டம் முழுவதும் ஆளுமை செலுத்திவந்த நிலையில், சொந்த மாவட்டமான வடக்கு ஒன்றியத்தில் தனது ஆளுமை செலுத்த முடியவில்லையே என்கிற விரக்தியின் உச்சத்தில் வைத்தியலிங்கம் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.

 

DMK guarantees victory  Duraikkannu supporters suffer
                                                        கோபிநாதன்

 

இந்த நிலையில் துரைக்கண்ணு இறந்ததும், தனது ஆதிக்கத்தை அதிரடியாக செலுத்தினார். துரைக்கண்ணுவின் இறப்பிலும் கூட மிகப்பெரிய அரசியலை செய்தார். இந்தச் சூழலில் பாபநாசம் தொகுதியில் அமமுக வேட்பாளராக களமிறங்கும் ரெங்கசாமிக்கு சாதகமாக, அதிமுக சார்பில் டம்மி வேட்பாளராக கோபிநாதனை அறிவித்திருப்பதாக குமுறுகிறார்கள் அதிமுகவினர். இதுகுறித்து பாபநாசம் தொகுதியைச் சேரந்த அதிமுக பிரமுகர்கள் கூறுகையில், “துரைக்கண்ணு கடந்த இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருக்கும்போது மிக எளிமையாக இருந்தார். இந்தமுறை அமைச்சர் ஆனதும் முற்றிலுமாக மாறிவிட்டார். இந்தமுறை எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள் கூட பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டனர் என்பது ஊரறிந்த செய்திதான். அப்படியிருக்க அமைச்சராக இருந்த துரைக்கண்ணு சும்மாவா விடுவார், குவிச்சிட்டார். அந்தக் கோபம் வைத்தியலிங்கத்திற்கு உண்டாகிடுச்சி, அதோட வைத்தியின் ஆதரவாளர்கள் கூட துரைக்கண்ணுவிடம் வந்து அடிபணிந்தனர்.

 

அதற்கு சந்தர்ப்பம் பார்த்திருந்தவர், துரைக்கண்ணு இறந்ததும் அவரது ஆதரவாளர்களை ஓரங்கட்டினர். துரைக்கண்ணுவின் படங்களைப் போடக்கூடாது, அவரைப் பற்றி பேசக்கூடாது என்பது போல கண்டிஷனைப் போட்டுவிட்டார். துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் உள்ளுக்குள் வேதனைப்பட்டாலும், வேறு வழியில்லை என்பதால் துரைக்கண்ணுவின் படத்தைப் புறக்கணித்தே பேனர் வைத்தனர். இந்த நிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வழக்கம்போல் வைத்தியலிங்கம் பாபநாசம் வடக்கு ஒன்றியச் செயலாளர் கோபிநாதனுக்கு சீட் கொடுத்து, தனக்கு வேண்டபட்டவரான அமமுக வேட்பாளரான ரெங்கசாமியின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்துள்ளார்.

 

DMK guarantees victory  Duraikkannu supporters suffer
                                                          துரைக்கண்ணு

 

திமுக இந்த முறை சர்வசாதாரணமாக வெற்றிபெறும். போட்டி ரெங்கசாமிக்கும், திமுக வேட்பாளருக்கும்தான் இருக்கும். அதிமுக ரோல்லயே வரமுடியாது” என்று ஆதங்கத்துடன் சொன்ன துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள், “வைத்தியலிங்கம் திட்டமிட்டே பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளில் திமுக வெற்றிபெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். கும்பகோணத்தில் அமமுகவிற்கும், திருவிடைமருதூரில் தனக்கு எடுப்பாக இருந்த, மாவட்டக் கவுன்சிலருக்கு கூட ஜெயிக்கமுடியாத யூனியன் வீரமணிக்கு சீட் கொடுத்திருக்கிறார். பாபநாசத்தில் ரெங்கசாமியை வெற்றிபெற வைக்கும் எண்ணத்தில் கோபிநாதனுக்கு சீட் கொடுத்துள்ளார். மூன்று தொகுதிகளிலும் திமுக சர்வ சாதாரணமாகவே வெற்றிபெற்றுவிடும்” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்