Skip to main content

இதுவா சமூக நீதி? இந்த அநீதி முடிவுக்கு வருவது எப்போது? ராமதாஸ் கண்டனம்

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
ramadoss

 

துணைவேந்தர்கள் நியமனம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

அதில், ''தமிழ்நாட்டில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக அவற்றில் ஒரு பல்கலைக்கழகத்தில்கூட வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படவில்லை. தகுதியானவர்கள் ஏராளமாக இருந்தும் புறக்கணிப்பு தொடர்கிறது'' என கண்டனம் தெரிவித்துள்ள அவர், 

 

''அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடுத்த மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்து துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார். உள்ளூரில் வன்னியர் சமுதாயத்தில் தகுதியான பேராசிரியர்கள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதுவா சமூக நீதி?  இந்த அநீதி முடிவுக்கு வருவது எப்போது?'' என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்