ரஜினியின் அரசியல் வருகைப் பற்றி வெளிப்படையாக கருத்து சொல்வதை முதல்வர் எடப்பாடி தவிர்த்து வந்தாலும், முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளிடமும் தனது சமூக தொழிலதிபர்களிடமும் ரஜினியைப் பற்றி விவாதித்தப்படிதான் இருக்கிறார். குறிப்பாக, அப்படி விவாதிக்கும் போது, ஆன்மிக அரசியல்னு அவர் (ரஜினி) சொல்வதை கூர்ந்து கவனித்தால், ஆன்மீகத்துக்கு எதிரானது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் தான். அதனால் தி.மு.க. கூட்டணிக்குத்தான் அவரது வருகை பாதிப்பை தரும் என நினைத்தேன்.
ஆனால், எம்.ஜி.ஆருக்கு துணை நின்றவர்கள் ரஜினிக்கு பின்னால் வருவார்கள்னு தமிழருவிமணியன் சொல்வதை பார்த்தால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு வருமோ என யோசிக்க வைக்கிறது என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறார். ரஜினி காய்ச்சல் அவரை தொற்றிக் கொண்டிருக்கிறது என்கின்றனர்.
இந்த நிலையில், ரஜினியின் வருகை அ.தி.மு.க.வை பாதிக்குமா? என திடீர் சர்வே ஒன்றை எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி. அதில், பாசிட்டிவ்வான அம்சம் இல்லை என்றும் , ரஜினியின் வருகையால் பல தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றி கேள்விக்குறியாகும் என்றும் சொல்லப்பட்டிருப்பதால், முதல்வர் எடப்பாடி ஷாக் ஆகியிருக்கிறாராம்.