ரசிகர்களின் எதிர்பார்பப் புரிகிறது. எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். தற்போது மே 23க்கு பிறகு தமிழக அரசியல் நிலவரம் எப்படி இருக்கும் என்று ஆலோசனை செய்த ரஜினி, கட்சி நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்றை போட்டுள்ளார். எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அரசியல் கட்டமைப்பு பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த அடிப்படையில் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் இரவி அம்மாவட்ட நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், ''சட்டமன்ற தேர்தல் எப்பொழுது வந்தாலும் சந்திக்க தயார் என்ற தலைவரின் அறிவிப்பிற்கு ஏற்றவாறு இதுவரை நம் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாய் செயல்பட்டு வந்த அரசியல் கட்டமைப்பு பணிகளை தொடர்ந்து செய்து விடுபட்ட வேலைகளை முழுமையாய் செய்து முடித்து தலைவர் சந்திக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும், அவர் நிகழ்த்த போகும் அரசியல் மாற்றத்திற்கும் துணை நின்று தலைவரின் வெற்றியை உறுதியாக்குவோம்'' என்று கூறியுள்ளார்.
இதேபோல் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளுக்கு இதுபோன்ற அறிவுறுத்தியுள்ளனர்.