Published on 13/05/2019 | Edited on 13/05/2019
நேற்று அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் இருந்த கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக்கூறினார்.

இது ஒருபக்கம் ஆதரவையும், இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் கூறிவருகின்றனர். அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்கவேண்டும். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக்கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசிவரும் கமல்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தும்படியாக பேசுபவர்கள் கண்டிக்கவேண்டும். தேர்தல் ஆணையம் கமல் கட்சியை தடை செய்யவேண்டும்.