Skip to main content

'கே.சி.பழனிசாமி vs எடப்பாடி பழனிசாமி'-நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Published on 24/04/2025 | Edited on 24/04/2025
 'K.C. Palaniswami vs Edappadi Palaniswami' - Court imposes interim injunction

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

'கோவையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பினார்' என முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தது.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமி சார்பில் 'வழக்கை ரத்து செய்வதோடு இந்த வழக்கில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணையில் இருந்தது. இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, நேரில் ஆஜராகவும் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார். நான்கு வாரங்களில் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்