மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா. தொடர்ச்சியாக தனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். செல்லூர் ராஜு, ஆர்.பி உதயக்குமார் போன்றோரின் லோக்கல் பாலிடிக்ஸ் காரணமாக அவருக்கு பதவி கிடைக்காமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனது மகனுக்கு மதுரை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பெற்றார். அந்த தேர்தலில் மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அதிமுக படுதோல்வியை சந்தித்தால், இனி அதிமுகவில் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பினார். எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் ராஜன் செல்லப்பா இப்படி பேசுகிறார் என்று அதிமுகவினரே பேசி வந்தனர்.
![rajan sellappa](http://image.nakkheeran.in/cdn/farfuture/cs56T3FmVTG3lugtLo54hQhRsl3GfaFRQllkSeL-3iE/1565252129/sites/default/files/inline-images/f321.jpg)
ராஜன்செல்லப்பாவின் அந்த கோரிக்கை அதிமுகவிலும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை எழுப்பியது. இந்த நிலையில் தற்போது அமைச்சர் மணிகண்டன் பதவி பறி போனதால் மீண்டும் தனக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று ராஜன் செல்லப்பா தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளராம்.
அமைச்சர் பதவி வேண்டும் என்று தொடர்ச்சியான கோரிக்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இசைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று ராஜன் செல்லப்பா மதுரை வீட்டில் அவரது ஆதரவாளர்கள் வந்து செல்கின்றனர். இதனால் மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.