வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து பேரணாம்பட்டு பகுதியில் திரண்டிருந்த இஸ்லாமிய மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டிப் பேசிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் குறித்தும் ஆவேசமாக பேசினார். அப்போது, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. அது ஒரு கண்துடைப்பு விசாரணை. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை இந்த நாட்டுக்கு அடையாளப்படுத்துவதுதான். இன்னும் சொல்லப்போனால் அதிமுக தொண்டர்களுக்காக இதனை செய்தே தீருவேன் என ஆவேசமாக பேசினார்.
மேலும், ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அந்த அம்மையாரின் மரணத்திற்காக விசாரணை கமிசன் அமைக்க முயற்சிக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதும், ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்தார். தியானம் செய்துவிட்டு வெளியே வந்தவர், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று சொன்னார். இதை யாரை ஏமாற்ற...
இப்போது அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருக்கிறார். விசாரணை கமிசன் பற்றி அவர் பேசுவதில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் ஏன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் தவிர்க்கிறார். ஆகையால் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார் மிக அழுத்தமாக.