17 வது மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் நிறைய இடங்களில் இயந்திரங்கள் பழுதான நிலையில் சுமார் ஒரு மணி நேரம், 2 மணி நேரம் கால தாமதமாக வாக்குப் பதிவுகள் தொடங்கியது. மேலும் பல இடங்களில் இடையில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வாக்குப் பதிவுகள் நிறுதப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தினையாக்குடி ஊராட்சி திருநெல்லிவயல் வாக்குச் சாவடியில் வாக்காளர்களுக்கு பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ள வேட்பாளர்களின் சின்னங்கள் அடங்கிய பட்டியலில் திமுக கூட்டணி சின்னமான ஏணி இல்லை. மேலும் உதயசூரியன் கை உள்ளிட்ட சின்னங்களும் இருந்ததால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. மேலும் பூத் சிலிப் கொடுக்கவில்லை என்று வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வாக்குச் சாவடியை பூட்டினார்கள். தகவல் அறிந்து வந்த அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானம் செய்து புதிய சுவரொட்டி ஒட்டிய பிறகு வாக்கு பதிவு தொடங்கியது.