வேலூர் அருகே 3 மனித மிருகங்களால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகி தீக்குளித்த 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.#ViolenceAgainstTNWomen
— Dr S RAMADOSS (@drramadoss) June 17, 2020
வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி வித்யா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பென்னாத்தூர் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்புப் படித்து முடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் இவர் குளித்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆகாஷ் என்ற பூனை கண்ணனின் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அவனோடு சேர்ந்து அவனது நண்பர்களும் வீடியோ எடுத்து அந்த மாணவியை ஆசைக்கு இணங்கும்படி வீடியோவைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அருகில் இருப்பவர்கள் அந்த மாணவியை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ளார். அதில், வேலூர் அருகே 3 மனித மிருகங்களால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகி தீக்குளித்த 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மாணவியைத் தவறாக படம் பிடித்து பாலியல் இச்சைக்கு இணங்கும்படி அச்சுறுத்திய அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள். மிருகங்களுக்கு இணையான அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.