சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினி அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து பேசுவோமா என யோசித்து வருகிறேன் என்று தெரிவித்தார். மேலும் ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் பிறகு கூட்டணி வைப்பதை பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக கட்சி கூட்டணியில் இருப்பது குறிப்படத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வருகிற சட்ட மன்ற தேர்தலில் பாஜக, ரஜினி, பாமக மற்றும் சில அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாமக மாநில தலைவர் ஜிகே மணி தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.மணி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் மற்றும் ஹைட்ரோகார்பன் வராது என்ற அறிவிப்புகளை வரவேற்பதாக கூறினார். மேலும் தமிழக முதலமைச்சர் அதனை சட்டமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் வருகிற சட்ட மன்ற தேர்தலில் பாஜக, ரஜினி, பாமக மற்றும் சில அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக்க நினைக்கும் பாஜகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.