Skip to main content

மோடியை புகழ்ந்த ப.சிதம்பரம்! அதிர்ச்சியில் காங்கிரஸ்!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

காஷ்மீர் மாநில உரிமை பறிப்பைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப. சிதம்பரம் பேசும் போது மத்திய, மாநில அரசி விமர்சித்து பேசினார். இதற்கு எடப்பாடி பூமிக்கு பாரமாக சிதம்பரம் உள்ளார் என்று பேசியது அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசு திட்டங்களை பெரும்பாலும் ப.சிதம்பரம் விமர்சித்தே அறிக்கை விடுவார். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசிய கருத்துக்கு சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.   
 


அதாவது சுதந்திர தின உரையில் மோடி பேசிய பல கருத்துகளில் மூன்று கருத்துகளை தான் ஆதரிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதில் பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று பேசிய மூன்று முக்கியமான விஷயங்களை நாம் அனை வரும் வரவேற்க வேண்டும். சிறிய குடும்பம் என்பது தேசத்திற்கான கடமை, செல்வத்தை உருவாக்குபவர்களை மதித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல்' என்று குறிப்பிட்டுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின்போது பாஜக அரசை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம் மோடி உரையை ஆதரித்து ட்விட் போட்டது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்