Published on 13/07/2019 | Edited on 13/07/2019
உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் 10% இட ஒதுக்கீட்டிற்கு திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம், திராவிட கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பும், புதிய தமிழகம், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் மட்டுமே 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தின் முடிவில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தது அனைத்து கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசின் திட்டம் சார்ந்த எந்த கேள்விகளுக்கும் முதல்வர் நேரடியாக பதில் சொல்லாமல் தயக்கம் காட்டி வருவது அரசியல் கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பி வருகிறது. குறிப்பாக பாஜகவுக்கு எதிரான எந்த கூட்டத்திலும் பங்கேற்க கூடாது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பது தெளிவாக தெரிகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.