நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாகி விட்டது என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள்.இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டத்திற்கு முன்பு அதிமுக அலுவலகம் முன்பு இருக்கும் சுவரில் எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்து பொது செயலாளராக வர வேண்டும் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு இருந்தன.மேலும் சிவகங்கை பகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் தான் அடுத்த பொது செயலாளராக வர வேண்டும் என்று போஸ்டர் அடித்துள்ளனர்.
இன்னும் ஒரு சிலர் பன்னீர்செல்வம் தான் கட்சி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.இந்த நிலையில் தமிழக ஆளுநர் இரண்டு நாட்களுக்கு முன்பு அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலை தமிழ்நாட்டில் மட்டுமின்றி மத்தியில் ஆளும் பாஜகவும் உற்று நோக்கி கவனித்து வருகிறது.இன்னும் சிலர் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலுக்கு பாஜக தான் காரணம் என்றும் கூறிவருகின்றனர்.இதனால் ஆட்சி முடியும் வரை அதிமுகவில் தற்போது நிலையை இருக்கும் என்றும்,அதன் பின்பு உட்கட்சி பூசலால் ஓபிஎஸ், இபிஎஸ் அணி என்று பிரிய வாய்ப்பு உள்ளதாக கூறிவருகின்றனர்.
மேலும் சசிகலா விடுதலை அடைந்து வரும் போது அதிமுக தலைமையில் மாற்றங்கள் வரும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் ஓபிஎஸ் அதிமுகவில் பிரிந்து மீண்டும் ஓபிஎஸ் அணி வரக்கூடும்,பின்பு ரஜினி,ஓபிஎஸ் அணி,பாஜக கூட்டணி அமையக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.