Skip to main content

“இப்போதுதான் திராவிட மாடலை ஈரோட்டில் பார்த்துவிட்டு வந்தோம்” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

DMDK Vijayakand torment!

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து ஈரோட்டில் சில அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது எனப் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.

 

இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''சுயேச்சைகள் மட்டுமல்ல தேமுதிகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்திருக்கிறோம். எத்தனையோ தேர்தலை நாங்களும் பார்த்திருக்கிறோம் 18 வருடமாக... ஆனால் இந்த மாதிரி ஒரு தேர்தலை நாங்கள் பார்த்ததே கிடையாது. திராவிட மாடல்... திராவிட மாடல் என்கிறார்கள் அதை இங்கே தான் பார்த்தோம். ஓட்டுக்கு காசு கொடுப்பாங்க, இலவசம் கொடுப்பாங்க அதெல்லாம் எல்லா தொகுதிகளிலும் நடக்கிற விஷயம். ஆனால் ஆடு மாடுகளை போல் பட்டறையில் அடைத்து வைப்பது ஈரோட்டில் நடக்கிறது.

 

மக்களை காலையில் அடைத்தார்கள் என்றால் இரவு வரைக்கும் விடமாட்டார்கள். போகும்போது 500 ரூபாய் கொடுப்பார்கள். இதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கிளியை அடைத்து வைத்ததற்கு ரோபோ ஷங்கருக்கு 1.50 லட்சம் ரூபாய் அபராதம் போட்டுள்ளார்கள். ஆனால் இத்தனை ஆயிரம் மக்களை அடைச்சு அப்படி என்ன ஓட்டு வாங்க சொல்லுது. நீங்கள் நல்லது செய்திருந்தால், இந்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டங்களை எல்லாம் செய்திருக்கிறோம் என்று மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்கலாம் இல்லையா. கேட்டால் திராவிட மாடல் என்கிறார்கள். இன்று திராவிட மாடல் என்ன என்பது தெளிவாக ஈரோட்டு மக்களுக்கு தெரிந்துவிட்டது'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்