Published on 14/06/2019 | Edited on 14/06/2019
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத தமிழகம், ஆந்திரா, மேற்குவங்க மாநிலங்களின் கவர்னர்களான பன்வாரிலால், நரசிம்மன், திரிபாதி ஆகியோரின் டெல்லி பயணம் இப்போதைய சூழலில் உற்றுக் கவனிக்கப்படுகிறது. அதிலும் தமிழக சட்டமன்றம் கூடுவதை தள்ளிப் போடு மாறு எடப்பாடியிடம் இருந்து வந்திருக்கும் கோரிக்கை, 7 பேர் விடுதலையில் என்ன முடிவு எடுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விவாதித்திருக்கிறார் பன்வாரிலால்.
தேவைப்பட்டால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்கும் திட்டத்தில் உள்ளாராம் பன்வாரிலால். அதே நேரம் தமிழகத்திற்கு புது கவர்ன ரை நியமிக்கும் ஐடியாவில் மோடி இருப்பதால், பன்வாரிலாலிடமிருந்து ராஜினாமா கடிதம் வாங்கப்படலாம் என்றும் டெல்லியில் பேச்சு ஓடிக் கொண்டிருக்குது.இந்த நிலையில் தமிழகத்துக்கு எப்ப வேண்டுமானாலும் புது கவர்னர் நியமிக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.