

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
கரோனா நோய்தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் செந்துறை வடக்கு ஒன்றியத்தில் சிறுகளத்தூர் ஊராட்சியில் உள்ள விளிம்புநிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நெசவாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 150 குடும்பத்திற்கு மேல் திமுக நிவாரணம் வழங்கியது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி, மாவட்டச் செயலாளர் எஸ். எஸ். சிவசங்கர் ஆலோசனையின் பேரில் ஒன்றிய கழகச் செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில் தலா 5 கிலோ அரிசியும் மற்றும் காய்கறிகளும் வீடு வீடாகச் சென்று நிர்வாகிகள் வழங்கினர். ஆலத்தியூர், கோட்டைக்காடு, தெத்தேரி ஆகிய கிராமங்களில் உள்ள விளிம்புநிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 50 குடும்பத்திற்கு மேல் திமுக நிவாரணம் வழங்கியது.