
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறைச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றுவருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறைச் செயலாளர்களுடன் நடத்தும் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், சட்டமன்றத்தில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை குறித்தும் அந்தந்த துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
முதல் நாளான நேற்றைய கூட்டத்தில், நகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை, தொழில்துறை, மின் துறை உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்றுவரும் கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஊரகவளர்ச்சி, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலாளர்களுடன் ஆலோசனை நடந்துவருகிறது.