கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் போட்டியிடும் 9 பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பொங்கல் தொகுப்பை கூட உருப்படியாக கொடுக்க முடியாத அளவில் தமிழக அரசின் நடவடிக்கை மோசமாக உள்ளது. தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரி திமுகவினருடையது. நீட் மூலம் சாதாரண மக்களின் குழந்தைகள் மருத்துவம் படிக்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளியில் படித்த 545 மாணவர்கள் நீட் மூலம் மருத்துவம் கிடைக்க வழி கிடைத்துள்ளது. ஆளுநரை தினமும் வம்பிழுப்பது, பிரதமரை வம்பு இழுப்பது.. இது பழைய பாரதிய ஜனதா கட்சி அல்ல இது புதிய பாரதிய ஜனதா கட்சி வட்டியும் முதலும் திருப்பித் தரப்படும். தமிழகத்தில் இன்னும் 4 வருடம் திமுக ஆட்சி நீடிக்குமா? என்பது அவர்கள் கையில் உள்ளது. கலைஞரின் அதே டெக்னிக் மூலம் கதை, வசனம் எழுதி ஆட்சி நடத்தி வருகிறார் ஸ்டாலின்” என்று பேசினார்.