தமிழக பா.ஜ.க.வுக்குப் புதிய தலைவரை விரைவில் நியமிக்க போவதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது பற்றி விசாரித்த போது, தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றார். அதன் பின்பு தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த பாஜக ரேஸில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் நாற்காலியில் உட்காரும் ரேஸில் வானதி சீனிவாசன், கே.டி. ராகவன்,ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. இதில் மாநிலத் தலைவர் பட்டியலில் தேசிய இளைஞரணித் தலைவர் ஏ.பி. முருகானந்தம் பெயர் முதலிடத்தில் இருப்பதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் கூறுவதாக சொல்லப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் ஏ.பி. முருகானந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகரும், எஸ்.வி.சேகரும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியிருக்கிறார். மேலும் தமிழக பாஜக தலைவர் பதவி ரேஸில் நிர்மலாவின் சிபாரிசோடு வானதி சீனிவாசனும் உள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.