![Naam Tamilar Party candidate is actively campaigning in South Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/PxURCn-aZyf4PO_GJ7HU-ORDUlj3Ogc45TMv8wpflLY/1712048692/sites/default/files/2024-04/5_0.jpg)
![Naam Tamilar Party candidate is actively campaigning in South Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/PfTUPloCeCMhsht5rdwLsceigT2uvueZbxVGIdK-6kw/1712048692/sites/default/files/2024-04/7_0.jpg)
![Naam Tamilar Party candidate is actively campaigning in South ChennaiNaam Tamilar Party candidate is actively campaigning in South Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/3sxHAb40Tllu0Mcq8BMa5tMRqAdtoP3Mg5oWWCcPm5U/1712048692/sites/default/files/2024-04/4_0.jpg)
![Naam Tamilar Party candidate is actively campaigning in South Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/15IHo4KXB9IfbPVsW8bnNOY11OFD9HmgIAL-DTyv6Os/1712048692/sites/default/files/2024-04/8_0.jpg)
![Naam Tamilar Party candidate is actively campaigning in South Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/FBxhY_Jv1vND3W6lJLI5vfbFMX2PvTZTouu3mbPfA_g/1712048692/sites/default/files/2024-04/21_0.jpg)
![Naam Tamilar Party candidate is actively campaigning in South Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/yd2kvRI2StHg50o6tmAxMNYwpbsbSfoU7I1P9xU3X8o/1712048692/sites/default/files/2024-04/23_0.jpg)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர். மருத்துவர் இரா.கார்த்திகேயன் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகில் உள்ள காய்கறி கடை, பர்மா உணவகம் போன்ற கடைகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார்.