2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2016இல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். 2011இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் தினகரனின் அமமுக கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். திமுக கரூர் நிர்வாகிகள் கூடத்தில் கலந்து கொண்ட திமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசும் போது, இப்போது நடக்கும் எடப்பாடி ஆட்சியானது ஊழல் ஆட்சியாக இருந்து வருகிறது. அனைத்து துறையிலும் கொள்ளையடித்து வருகின்றனர். இதனை நான் சொல்லவில்லை., துணை முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வமே என்னிடம் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆட்சியை முறியடிக்க திமுக தலைவர் என்னிடம் சிக்னல் கொடுத்தால்., மறுநாளே 15 எம்.எல்.ஏக்களை கோபாலபுரத்தில் நிறுத்திவிடுவேன் என்று அதிரடியாக தெரிவித்தார்.
இது மட்டுமில்லாமல் ஒரு சில அமைச்சர்களும் கோபாலபுரத்திற்கு வர தயாராக உள்ளனர். நான் அமைச்சர்களின் வருகையை விரும்பவில்லை. மக்களால் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார். நம்மால் என்ன செய்ய இயலுமோ அதனை வாக்காளர்களிடம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தெரிவித்தார். அதிமுக கட்சி போல பொய்யான வாக்குறுதியை மக்களிடம் கட்டாயம் தெரிவிக்க கூடாது என்றும் என்னிடம் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வரியை குறைத்துள்ளனர். முதியோர்களின் உதவி தொகையானது ஏராளமாக வழங்கப்பட்டு வருகிறது. பணம் ஆணையத்தில் இருந்து வந்தாலும்., மாத மாதம் பணம் வரவில்லை.
மத்தியில் ஆட்சி செய்யும் பராதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் விருப்படியே தமிழகத்தில் நடைபெறுகிறது. இவர்களின் ஆட்சி நிறைவு பெற்றதும் சேலம், திருச்சி, வேலூர் மற்றும் புழல் மத்திய சிறைகளில் ஊழல் பேர்வழிகள் அனைவரும் மொத்தமாக அடைக்கப்படவுள்ளார்கள். தமிழகத்தை பாதிக்கும் அனைத்து திட்டத்தையும் எதிர்க்கும் தலைவராக ஸ்டாலின் இருந்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் 234 நமக்குத்தான் என்று தெரிவித்தார்.