![raman ravanan](http://image.nakkheeran.in/cdn/farfuture/6fuqckYE5FPM3bOErEVxeQFiWXnOt3CZj4Zs8OTxizU/1548932338/sites/default/files/inline-images/raman-ravanan.jpg)
உத்திரபிரதேசம், பரியா சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் சர்ச்சையை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார். நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய இவர். மோடியை ‘ராமாயண நாயகன்’ என்றும், யோகி ஆதித்யநாத்தையும், அமித்ஷாவையும் ராமனின் சகோதரர்களோடு ஒப்பிட்டுள்ளார். இதோடு நிற்காமல் ராகுல் காந்தியை ராவணன் என்றும், ப்ரியங்கா காந்தியை சூர்ப்பனகை என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், ராமருக்கு எதிராக தனது சகோதரி சூர்ப்பனகையை ராவணன் களம் இறக்கினான். ஆனாலும் ராவணனை வீழ்த்தி ராமர் இலங்கையை கைப்பற்றினார். மோடிக்கு எதிராக போராட முடியாத ராகுல், பிரியங்காவை கட்சி பொதுச்செயலாளராக நியமனம் செய்து, மோடிக்கு எதிராக போராட முயற்சிக்கிறார். பிரியங்காவை தொடர்ந்து அவரது கணவரும் அரசியல் பிரவேசம் செய்ய உள்ளார். என தெரிவித்துள்ளார். இவர் முன்பிருந்தே பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.