Published on 02/04/2019 | Edited on 02/04/2019
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்காக அந்தந்த கட்சியினர் தங்கள் கட்சியில் உள்ள நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கி வாக்கு சேகரித்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மதுரை அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.ஆர். ராஜ் சத்யனுக்கு ஆதரவாக இந்திய தேசிய முஸ்லிம் லீக்-இன் ஹைதர் அலி அவர்கள் மதுரை கோரிப்பாளையம் அருகே வாக்கு சேகரித்து கொண்டு இருந்தார்.

அப்பகுதி அதிகம் இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்பதால் அவர்களது பிரச்சார வாகணத்தில் இருந்த பேனரில் மோடியின் புகைப்படத்தை மறைத்துவிட்டு அதற்கு பதிலாக அண்ணாவின் புகைப்படத்தை பேனரில் ஒட்டியபடி வாக்கு சேகரித்தனர். பொதுவாகவே இப் பகுதியில் பா.ஜ.க-வினர் வாக்கு சேகரிக்க வருவதில்லை. இந்ந நிலையில் அவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு பயந்து பயந்து வாக்கு சேகரிக்கின்றனர் அ.தி.மு.க வேட்பாளர்கள்.
அஹமது அலி