அரசியலில் யோக்கியம் பேசும் பாஜக, ஊழலை எதிர்ப்பதாக பேசும் பாஜக கர்நாடகா தேர்தலில் கிரிமினல் வழக்குகளில் சிறைசென்ற எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட டிக்கெட் வழங்கியிருக்கிறது. இதையடுத்து பாஜகவுக்குள்ளேயே கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது.
பல்லாரி தொகுதி எம்எல்ஏ சோமசேகரரெட்டி மற்றும் அவருடைய கூட்டாளிகள் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாகர் தொகுதி எம்எல்ஏ ஹர்த்தால் ஹலப்பா மீது கற்பழிப்பு புகாரை உறுதி செய்து சிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மலூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்னய்யா ஷெட்டி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்.
சிவாஜி நகர் தொகுதி எம்எல்ஏ கட்டாவும் அவருடைய மகன்களும் நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.
கோலார் தங்கவயல் தொகுதி எம்எல்ஏ ஓய்.சம்பங்கி லஞ்சம் வாங்கிய வழக்கில் லோகாயுக்தாவால் சிறைக்கு அனுப்பப்பட்டவர்.
ஷிகரிபூரா தொகுதி எம்எல்ஏவாகவும் முதல்வராகவும் இருந்த எடியூரப்பாவும் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்தான். இவர்கள் அனைவருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இதையடுத்து கர்நாடகா பாஜகவில் உள்கட்சி குழப்பம் அதிகரித்துள்ளது.