அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா எனும் பிரச்சனையை நமக்குள் நாமே பேசி தீர்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில் இன்று பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட கூடிய தீர்மானங்கள் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒ.பன்னீர்செல்வம், பொன்னையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாமே பேசுவதால் எந்த பயனும் கிடையாது. ஆகையால் அதிமுக தலைமை அலுவலக நிர்வாகி மகாலிங்கத்தை ஓபிஎஸ் அழைத்து எடப்பாடி பழனிசாமியை கட்சி அலுவலகம் வர சொல்லுங்கள் இங்கேயே இதுபற்றி பேசுவோம் என சொல்லுங்கள் என சொல்லியதாகவும், உடனே எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசிய மகாலிங்கம், அலுவலகம் வர எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து இருப்பதாக ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்துள்ளதாகவும் இதனால் காத்து கிடந்த ஒபிஎஸ் உச்சக்கட்ட கோபத்தில் சென்றதாகவும் கூறப்படுகிறது.