


Published on 13/04/2019 | Edited on 13/04/2019
2019 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அக்கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நிதி மய்யம் கட்சியின் சார்பில் தென்சென்னை மக்களவை தொகுதியில் ஆர்.ரங்கராஜன் போட்டியிடுகிறார். அவர் வெள்ளிக்கிழமை தென்சென்னையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.