









Published on 21/02/2019 | Edited on 21/02/2019
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று கொடியேற்றினார். பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், பல இடங்களில் கொடி ஏறிக் கொண்டிருப்பதாகவும், அதை எங்கே ஏற்ற வேண்டும் என்ற இலக்கு மக்களுக்கு தெரியும். கடந்த ஓர் ஆண்டில் மக்கள் நீதி மய்யக் கட்சி வளர்ந்திருக்கிறது. மக்களுடனான தொடர்பை தாம் அதிகப்படுத்தி இருப்பதாகவும் மக்கள் தன்னை ஆசிர்வதித்து அனுப்பியிருப்பதாகவும் கூறினார்.