Published on 13/06/2019 | Edited on 13/06/2019
நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்த நிலையில் முதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம் முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.வருகிற ஜூன் 15 ஆம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த உடன் நேற்று மாலை தமிழக முதல்வர் பழனிசாமி, 7 பேர் விடுதலை குறித்து ராஜ்பவனில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியுடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சில அரசியல் முடிவுகள் குறித்தும் பேச உள்ளதாக கூறிவருகின்றனர்.அதிமுகவில் நிலவும் உட்கட்சி விவகாரம் குறித்தும்,இரட்டை தலைமை,ஒற்றை தலைமை குறித்து அதிமுகவில் விவாதம் எழுந்த நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.