Skip to main content

உடைந்த முக்கொம்பு மதகுகள் போல் அதிமுக ஆட்சி நடக்கிறது: ஸ்டாலின்

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
M. K. Stalin


திருச்சி முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் மேலணை கடந்த 22ம் தேதி இரவு தீடிர் என ஒரே நேரத்தில் 9 மதகுகள் உடைந்தது. 186 ஆண்டுகள் ஆனா கொள்ளிடம் அணை உடைந்த போது எந்த வித உயிர்சேதம் இல்லாத நிலையில் தேக்கி வைக்க வேண்டிய தண்ணீர் கடைமடைக்கு செல்லாமல் அப்படியே கடலுக்கு சென்றது என்கிற குற்றாச்சாட்டு இருந்தது. 
 

 

 

அதே நேரத்தில் மதகுகள் உடைந்தற்கும் மணல் கொள்ளை தான் காரணம் என்று அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டின. அடுத்த 10 நாட்களுக்குள் 90 இலட்ச ரூபாய் செலவில் கொள்ளிடம் அணை தற்காலிகமாக சரி செய்யப்படும் என்று முதல்வரும் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அதைத்து கட்சி தலைவர்களும் உடைந்த அணைகளை பார்வையிட்டு சென்றனர்.
 

 

 

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு , திருச்சி சிவா ஆகியோர் தலைமையில் இன்று காலை திருச்சி முக்கொம்பு அணைகளை பார்வையிட்டார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், உடைந்த முக்கொம்பு மதகுகள் போல் ஆட்சி நடக்கிறது. இந்த அணையை முன்பே ஆய்வு செய்திருந்தால் இந்த உடைப்பை தவிர்த்திருக்கலாம். தீடீர் என அதிகமாக தண்ணீர் திறந்து விட்டதால் தான் இந்த உடைப்பு ஏற்பட்டது. இதனை தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சியினரின் கருத்தாக இருக்கிறது. 
 

24ம் தேதி முதல்வர் பார்வையிட்டு உடனடியாக முடிவடையும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் 40 சதவீத வேலைகள் கூட முடிவடையவில்லை. அதே நேரத்தில் காய்ச்சல் சொல்லிக்கொண்டு வருவது கிடையாது என சொல்லியிருக்கிறார் இது எப்படி என்றால், ரோம் நகரம் பற்றி எரிகிற நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல் தற்போது நீரோ மன்னன் மகன் போல பேசி வருகிறார். சொல்லாமல் வரும் காய்ச்சல் ஆக சொல்லி வைத்து கமிஷன் அடிக்கிறார்கள். 
 

 

 

இன்னும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை கால்வாய் தூர்வரியதில் 5000 கோடி ரூபாய் ஊழலும் மணல் கொள்ளையும் நடத்தியிருக்கிறார்கள். இதனால் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது என்றார். 
 

உடைந்த அணையை பார்வையிட வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் அந்த பகுதி வாசிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். 

 

சார்ந்த செய்திகள்