Skip to main content

இதையும் ரத்து பண்ணிடுங்க... பசங்க விளங்கிடுவாங்க... பாஜகவின் எஸ்.வி. சேகர் சர்ச்சை கருத்து!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

தமிழகத்தில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பழைய தேர்வு முறையே தொடரும்". இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

  bjp



5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வரவேற்புகள் தெரிவிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 5வது 8 வது பொதுத்தேர்வு ரத்து    கல்வித்துறை உத்தரவு.  அப்படியே 10 வது 12 வது தேர்வையும் ரத்து பண்ணிடுங்க. பசங்க விளங்கிடுவாங்க. வால்க தமில். என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்