Skip to main content

இவ்வளவு ஆசைப்பட்டு அலைவதா? என்ன கொடுமை பாரு... சீமான் பேச்சு

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

 

கன்னியாகுமரி நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்போது அவர், நான்குநேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் வசந்தகுமார் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இப்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். ஒருவருக்கு இரண்டு பதவியா? இவ்வளவு ஆசைப்பட்டு அலைவதா? என்ன கொடுமை பாரு...

 

seeman speech


 

வசந்தகுமாருக்கு வாக்கு அளித்து எம்.பி.ஆகிட்டார். அவர் டெல்லி போயிட்டார் என்றால், அந்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யணும். நான்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். யார் வீட்டு காசு. உங்க வீட்டு, உங்க தாத்தா வீட்டு காசா. மக்களின் பணம். மக்களின் வரிப்பணத்தை மறுபடியும், மறுபடியும் வீணடிப்பதா? அங்கு இடைத்தேர்தல் வந்தால் தெண்டச் செலவுதானே?
 

ஏற்கனவே பிச்சை எடுக்கிறோம். மோடி ஆறாயிரம் போடுகிறேன் என்கிறார். ராகுல் 72 ஆயிரம் போடுவதாக சொல்லுகிறார். என்ன உங்க தாத்தா, பாட்டி சொத்தை வித்து போடப்போகிறீர்களா? 6 ஆயிரம் எங்கியிருந்து வந்தது. 72 ஆயிரம் எங்கிருந்து வந்தது. மக்களின் வரி. சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தது காங்கிரஸ். மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்றால் பொறுப்பு ஏற்க வேண்டியது காங்கிரஸ் கட்சி. பொறுப்பேற்க வேண்டியது பாஜக. 

 

ஆறாயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் போடப்படும் என்று சொன்ன மோடி, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் போட்டு முடித்திருக்கலாமே? இந்த மாதம் தேர்தல், கடந்த மாதம் அறிவிப்பு. இது ஒட்டுக்கு கொடுத்த காசு. நாட்டு மக்களுக்கு சேவை செய்ய கொண்டு வந்த திட்டம் அல்ல. 72 ஆயிரம் கொடுப்பதாக சொல்லுகிறார் ராகுல்காந்தி. யார் காசு. 57 லட்சம் கோடி நாட்டு கடன். அடித்தட்டு மக்களின் வரி சுரண்டப்படுகிறது. கல்வியை தரமாக நாட்டு மக்களுக்கு கொடுக்கவில்லை. தனியார் முதலாளிக்கு விற்றுவிட்டார்கள். இந்திய தேச மக்களுக்கு தரமான மருத்துவத்தை கொடுக்கவில்லை. தங்களுக்கு முடியவில்லை என்றால் அமெரிக்காவுக்கு செல்கிறார்கள். எங்களுக்கு முடியவில்லை என்றால் பாடையில் படுத்து நேராக சுடுகாடுதான். வேறு வழி கிடையாது. இவர்களுக்காக ஆட்சி. இவர்களுக்கா அதிகாரம்? இவ்வாறு பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்