








எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். அட்டவணை 9-ல் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திரண்ட அக்கட்சியினர், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் இறங்கி இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
படங்கள்: குமரேஷ்