ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதுவரை நான்கு கட்டங்களாக 65 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. நேற்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடந்தது. 16 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு காலை 7 மணியில் இருந்து நடைபெற்று வந்ததது. குறிப்பிட்ட 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்து கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து ஜார்கண்ட் தேர்தல் முடிந்து சி வோட்டர் எக்ஸிட் போல் ரிப்போர்ட் வெளிவந்துள்ளது. அதில், ஜார்கண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையலாம் அல்லது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகின்றனர். மேலும் இந்திய டுடே கருத்துக்கணிப்பின்படி நடத்திய எக்ஸிட் போல் கருத்து கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 50 இடங்களை பெறும் என்று கூறப்படுள்ளது. பாஜக 22 முதல் 34 தொகுதிகள் வரை பெற வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்பில் கூறப்படுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு 42 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகின்றனர். மேலும் ஹேமந்த் சோரன் முதல்வராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறிவருகின்றனர்.