திண்டுக்கல்லுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்த்து திமுகவினர் போராட்டம் நடத்த இருந்தனர். அதை கட்டுப்படுத்துவதற்காக மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபும் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்தனர். அப்படி இருந்தும் கூட மாவட்டத்தில் இருந்து 3 ஆயித்திற்கும் மேற்பட்ட உ.பி.கள் பெரும் திரளாகவே நகரில் காலை எட்டுமணியிலிருந்தே குவிய தொடங்கினார்கள். அதை கண்டு போலீசாரும் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி வந்தனர்.
திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னால் அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமையில் கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்த தயாராக இருந்தனர். இதையடுத்து திடீரென கவர்னர், கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்த ரெவின்யூ மீட்டிங்கை கேன்ஷல் செய்தார். இந்த விஷயம் கவர்னர் அலுவலகத்திலிருந்து அறிவாலயத்திற்கு தெரிந்ததின் பேரில், கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டாம் என கழக துணை பொதுச் செயலார் ஐ.பி.க்கு தகவல் கொடுத்ததின் பேரில் போராட்டமும் கைவிடப்பட்டது. இருந்தாலும் ஐ.பெரியசாமியை பார்த்து விட்டு போக வேண்டும் என்பதற்காக கட்சிகாரர்கள் எல்லாம் கட்சி அலுவலகத்திற்கு திண்டு வந்தனர். ஐ.பி.யும் இருகரம் கூப்பி வணங்கியவாரே கட்சி காரர்களுக்கு நன்றி சொல்லியதுடன் மட்டுமல்லாமல் காலை டிப்பன் ரெடியாக இருக்கு அனைவரும் சாப்பிட்டு விட்டு பத்திரமா ஊருக்கு போய்விட்டு நாளை நடக்க இருக்கும் விலைவாசி உயர்வுக்கான போராட்டத்திற்கு வாருங்கள் என அனுப்பிவைத்தார்.
இந்த நிலையில் கவர்னரும் ஆர்.எம்.காலணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள் மூலம் காந்தியின் உறுதி மொழியை எடுத்து கொண்டு அதன் பின் வழக்கம் போல் மற்ற மாவட்டங்களில் ரோட்டை கூட்டுவது போல் ஆர்.எம். காலணி பகுதியில் ஏற்கனவே குப்பைகளை சிதறிவிட்டு இருந்த இடத்தை கவர்னருடன் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் உள்பட அதிகாரிகளும் சேர்ந்து கூட்டி விட்னர். அதன் பின் காமலாபுத்தில் நடக்க இருக்கும் மத்திய அரசு திட்டத்தை பார்வையிட சென்றார்.