நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமாங்கிறது ஒரு பக்கம் இருந்தாலும், அருணாச்சல பிரதேச சட்டசபை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பைக் கொடுத்திருக்கு. அதில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆளாகும் சபாநாயகர், எந்தவிதமான நடவடிக்கையிலும் இறங்க முடியாதுன்னு செக் வச்சிருக்கு. அதனால தனபாலும் தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து முடிவெடுத்த பிறகுதான், 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றி முடிவு செய்ய முடியும். இதைத்தான் எதிர்க்கட்சியான தி.முக.. சாதுர்யமா பயன்படுத்தியிருப்பதா சட்ட வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் மே 23-க்குப் பின் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுகிறோம்ன்னு தி.மு.க. சீனியர் துரைமுருகன், சூலூரில் அழுத்தம் திருத்தமா சொன்னார், அப்ப 22 தொகுதி இடைத் தேர்தல் தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு சாதகமான ரிசல்ட் கிடைத்தால் ஆட்சி மாற்றம் வருமா என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மனநிலை என்னன்னு தி.மு.க. சீனியர்களிடம் விசாரித்தோம் , 88 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருக்கும் தி.மு.க., இந்த 22 தொகுதிகளிலும் ஜெயிச்சாக் கூட 110 எம்.எல்.ஏ.க்கள்தான் அவர்கள் கையில் இருப்பாங்க. ஆட்சியைப் பிடிக்கணும்னா அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்+முஸ்லிம் லீக் ஆதரவும் அதுக்குத் தேவை. ஆனால் ஸ்டாலினோ சொந்த பலத்தில் மட்டுமே ஆட்சியில் அமரணும்னு நினைக்கிறாராம். அதனால், இப்போது ஆட்சியைக் கவிழ்க்கும் அளவிற்கு வலிமை இருந்தால் போதும். அதன் மூலம், எடப்பாடி ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு, பொதுத்தேர்தலில் மக்களை சந்திச்சி, தனி மெஜாரிட்டியோடு தி.மு.க. ஆட்சியை அமைக்கலாம்ங்கிற வியூகத்தில்தான் அவர் இருக்கார்ன்னு திமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.