இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லிருந்து 2,902-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 163 லிருந்து 184 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிரா- 423, தமிழகம்- 411, டெல்லி- 386, கேரளா- 295, ராஜஸ்தான்- 179, உத்தரப்பிரதேசம்- 174, ஆந்திரா- 161, தெலங்கானா- 158, கர்நாடகா- 128, மத்திய பிரதேசம்- 104 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இதனையடுத்து அமெரிக்காவில் பாஸ்டன் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி வரை அல்லது செப்டம்பர் இரண்டு வாரம் வரை நீட்டிக்கப்படலாம் எனத் தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் இந்தியாவில் ஜூன் மாதம் இறுதியில் தான் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மத்திய அரசு ஏப்ரல் 15க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.