Skip to main content

''17.28 நிமிடங்கள் பேசினேன்... பொன்னையன் தான் மிமிக்ரி எல்லாம் இல்லை''-நாஞ்சில் கோலப்பன் பேட்டி  

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

"I spoke for 17.28 minutes... Ponnaiyan only... is not all mimicry" - Nanjil Golappan interview

 

வழக்குகள், வாதங்கள், விசாரணைகள் என தொடங்கி நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுக்கூட்டம் நடந்து முடிந்த நிலையில், அதிமுக தலைமையக மோதல், அலுவலகம் சீல் வைப்பு என இன்னும் பரபரப்பு சூழ்நிலையே அதிமுகவில் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினரான பொன்னையன் அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் என்ற நிர்வாகி உடன் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது.  அந்த ஆடியோவில்...

 

நிர்வாகி: அண்ணே, என்னண்ணே இப்படி கட்சி நிலவரம் போகுது. என்ன பண்றது தலைவர் காலத்திலிருந்து கஷ்டப்பட்டு இருக்கோம் தொண்டர்களை யாருமே பாக்கலையே?

 

பொன்னையன்:  அதுதான்... இந்த கோடீஸ்வரன் கையில கட்சியா... அந்த கோடீஸ்வரன் கையில கட்சியானு போகுது.

 

"I spoke for 17.28 minutes... Ponnaiyan only... is not all mimicry" - Nanjil Golappan interview

 

நிர்வாகி: இன்னைக்கு தொண்டர்களோட நிலைமைய யோசிச்சு பாருங்க அண்ணே. ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. இந்த கட்சி தேறுமா இல்ல இப்படியே போயிடுமா என்ற சூழ்நிலைக்கு போகுது.

 

பொன்னையன்: ஒண்ணுமே ஆகாது, ஒரு பாதிப்பும் வராது. காரணம் தொண்டர்கள் எல்லாம் இரட்டை இலை பின்னாடி தான் இருக்காங்க. தலைவர்கள்தான் பணத்து பக்கம் இருக்கிறாங்க. அவரவர்கள் பணத்தை பாதுகாக்க போட்டி போட்டுக்கிட்டு ஆடுகிறார்கள்.  

 

நிர்வாகி: அண்ணே கண்டிப்பா 100% உண்மையான விஷயத்தை சொன்னீங்கன்ணே.

 

பொன்னையன்: தங்கமணியும் இப்ப வந்து முக.ஸ்டாலின் ட்ரப்பிள் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. இப்ப தங்கமணி தன்னை காப்பாத்திக்குறதுக்கு ஸ்டாலின் கிட்ட ஓடுறாரு. அதே மாதிரி கே.பி.முனுசாமி ஸ்டாலின திட்டுவதை நிறுத்திட்டாரு.

 

நிர்வாகி: ஆமா... ஆமா...

 

பொன்னையன்: குவாரி எக்ஸ்போர்ட்ல ஒரு மாசத்துக்கு ரெண்டு கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். கொள்ளை அடிச்சு கோடீஸ்வரனா வாழ்றதுக்கு இப்படி ஆடுறாங்க.

 

நிர்வாகி: உண்மையாலுமே கண்ணீர் வருது. கட்சியைப் பார்க்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு. ஒரு பதவி கூட நாம வாங்குனது கிடையாது. உங்களுக்கே தெரியும். ஆனா கே.பி.முனுசாமி நல்லா வாழ்ந்துட்டாரு அண்ணா. உங்களுக்கே தெரியும் இல்ல அண்ணா கே.பி.முனுசாமி ஒதுக்கி வைத்திருந்தார்கள் ஜெயலலிதா. ஆனா இந்த கே.பி.முனுசாமி இன்னைக்கு எத்தனை கோடிக்கு சம்பாதித்து வைத்திருக்கிறார் பாருங்க.

 

பொன்னையன்: அவன் நக்சலைட்டா இருந்தான். நக்சலைட்டோட தொடர்பு இருந்ததுன்னு சொன்னதுனால கே.பி.முனுசாமிய ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஸ்டாலின் தயவுக்காக திமுகவை திட்டுவது கிடையாது. பிஜேபி அண்ணாமலைதான் திட்றான்.

 

நிர்வாகி: அவர்தான் இன்னைக்கு இரண்டாவது கட்டத்தில் இருக்கிற மாதிரி இருக்கு.

 

பொன்னையன்: அதான் நடக்குது. நம்ம ஆளுங்கபூரா கோடி கோடியா கொள்ளை அடிச்ச உடனே மாட்டிக்குவோம்னு வாய மூடிக்கிட்டு இருக்காங்க. மாவட்டச் செயலாளர்களுக்கு எல்லாம் பணம் கொடுக்க வேண்டியது இல்லைங்க. ஆனால் ஒவ்வொரு மாவட்ட செயலாளர் குறைந்தது 100 கோடி 200 கோடி இல்லாமல் மாவட்ட செயலாளராக இல்லை. மாவட்ட செயலாளர் அவர்களுக்கு வரும் 16% அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். தலைமை கழகத்திற்கு எதுவுமே கொடுக்க வேண்டியதில்லை.

 

நிர்வாகி: அதனால் தான் எல்லாருமே எடப்பாடி எடப்பாடி என அவர் பின்னாடி போக தொடங்கி விட்டார்கள் என நினைக்கிறேன். பொன்னையன்: சம்பாதிக்கிறவன் பின்னாடி போனா தானே சம்பாதித்தை காப்பாற்றிக் கொள்ள முடியும். தளவாய் சுந்தரம் தான் இந்தியாவிலேயே பெரிய புரோக்கர்.

 

பொன்னையன்: தீர்மானத்தை படிப்பதற்காக மைக்கை கிட்டபோறேன். நான் படிக்கறதுக்கு முன்ன மைக்கிட்ட போய் நாய் கத்துற மாதிரி சி.வி.சண்முகம் ரத்து... ரத்து... ரத்துன்னு கத்துகிறான். ஏற்போர் ஆம், எங்க மறுப்போர் இல்லை என்று சொல்லணும். ஆனால் அதை விட்டுட்டு சி.வி.சண்முகமும், கே.பி.முனுசாமியும் ரத்து ரத்துன்னு சொல்லிட்டாங்க. எல்லா மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களை நான்கு வருஷமா கொள்ளை அடிக்கவிட்டார் பாத்திங்களா எடப்பாடி, அதான் அவர் முதுகுலையே இப்ப குத்திட்டாங்க. அதனாலதான் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுறாரு. சி.வி.சண்முகம் என் பையனை விட நாலு வயசு இளையவன். அவங்க அப்பாவும் நானும் கிளாஸ்மெட் லா படிக்கும்போது. பகல்லையே குடிச்சிட்டு இருப்பான். அவன் கையில 19 எம்.எல்.ஏக்கள் இருக்காங்க. ஜாதி அடிப்படையில் எம்.எல்.ஏக்கள் வச்சிருக்கறதுனால அவங்க பின்னால தொங்குறாங்க. எடப்பாடி கையில் 9 பேர் தான். மீதி எல்லாம் காசு கொடுத்து, அத கொடுத்து, கான்ட்ராக்ட் கொடுத்து வேலுமணி, தங்கமணி கையில் வைத்திருக்கிறார்கள். நாளைக்கு கே.பி.முனுசாமி ஒற்றை தலைமைக்கு வரலாம் அதுக்கும் முயற்சிகள் நடந்தது.... என அந்த ஆடியோ நீளுகிறது.

 

"I spoke for 17.28 minutes... Ponnaiyan only... is not all mimicry" - Nanjil Golappan interview

 

அந்த ஆடியோ தான் பேசியதில்லை என அதிமுக மூத்த உறுப்பினர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில், ''எடப்பாடியர் தலைமையில் இயங்கிவரும் இந்த புனித இயக்கத்தில் களங்கத்தை உருவாக்க வேண்டும், குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற சதி திட்டத்தைத் தீட்டி இருக்கிறார்கள். மிமிக்ரி எந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது ஹை டெக்னாலஜியோடு என்பது எல்லோருக்கும் தெரியும்.அந்த வகையில் கற்பனைகளை ஒன்றாக இணைத்து ஒரு மிமிக்கிரியாக பேசியிருக்கிறார்கள். மன்னிக்க முடியாத குற்றம். எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எனக்கு எடப்பாடி, வேலுமணி, கே.பி.முனுசாமி மீது மரியாதை இருக்கிறது. சி.வி.சண்முகம் மிக சிறிய வயதாக இருந்தாலும் மிக அறிவாளியாக செயல்படுகிறார். அவர் மீது அளப்பரிய ,மரியாதை இருக்கிறது. இது ஓபிஎஸ் முகாமை சேர்ந்தவர்களால்  தீட்டப்பட்ட சதித்திட்டம்'' என்றார்.

 

"I spoke for 17.28 minutes... Ponnaiyan only... is not all mimicry" - Nanjil Golappan interview

 

இந்நிலையில் இந்த ஆடியோவில் சம்பந்தப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பன் கன்னியாகுமரியில் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில்,''நான் பொன்னையனிடம் கடந்த 9.7.2022 அன்று இரவு 9.59 மணி முதல் மொத்தம் 17.28 நிமிடங்கள் பேசினேன். தனது கருத்துக்கள் ஓபிஎஸ்ஸிடம் சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் பேசினார். என்னிடம் பேசியது பொன்னையன்தான் மிமிக்ரி எல்லாம் செய்யவில்லை'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்