Skip to main content

“அதிமுக திராவிட இயக்கமா?..” - கனிமொழி கேள்வி

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

"How can ADMK be called a Dravidian movement.." - Kanimozhi MP

 

அதிமுகவை எப்படி திராவிட இயக்கம் என சொல்லமுடியும். அந்தக் கட்சி எந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். 

 

சென்னை மயிலாப்பூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் பேசிய அவர், “மத்திய அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிராக சி.ஏ.ஏ. மற்றும் விவசாயிகளுக்கு எதிராக புதிய வேளாண்மை சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்தபோது அதை எதிர்த்தது திமுக தான்.  இந்த இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்தபோதும், அதன்பிறகும் எந்தவித போராட்டத்தையும் கையில் எடுக்காத இயக்கம் அதிமுக. எனவே அவர்களை எப்படி திராவிட இயக்கம் எனச் சொல்லமுடியும். புதிய கல்விக் கொள்கை மூலம் மீண்டும் குல கல்வி முறையைக் கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்