Skip to main content

ஏழைகள், விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையை உருவாக்கியது காங்கிரஸ் - மோடி பேச்சு

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
modi


வரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 
 

தும்கூரில் இன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நரேந்திரமோடி, 
 

தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் வறுமை கோடு விவகாரத்தை பயன்படுத்துகிறது. இந்திரா காந்தி காலம் முதல் வறுமை குறித்து அக்கட்சி பேசி வருகிறது. ஆனால், ஏழை தாய் ஒருவரின் மகன் பிரதமரான பின்னர், வறுமையை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டது. இனிமேலும் மக்களை முட்டாளாக்க முடியாது என அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது.
 

இந்திரா காலம் முதலே, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏழை மக்களை காங்கிரஸ் முட்டாளாக்கி வருகிறது. அது, பொய்கள் நிரம்பிய கட்சி. ஓட்டுக்காக தொடர்ச்சியாக பொய் சொல்கின்றனர். விவசாயிகள் பற்றியும், ஏழைகள் குறித்தும் அக்கட்சிக்கு கவலை கிடையாது. அதிக காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் விவசாயிகளுக்கு என்ன செய்தது. காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 
 

நாங்கள் ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் நிறைவு பெறவில்லை. ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. விவசாயிகளுக்கு உழைக்க காங்கிரசுக்கு அதிக நேரம் இருந்தது. ஆனால், எதுவும் செய்யவில்லை. 70 ஆண்டுகளாக ஏழைகளை புறக்கணித்த காங்கிரஸ், அவர்களை தற்கொலை செய்யும் நிலையை உருவாக்கியது. ஓட்டு வங்கி அரசியல் செய்யும், அக்கட்சி வளர்ச்சி பற்றி சிந்தித்தது இல்லை. 50 ஆண்டுகளில் இல்லாததை பாஜக 50 மாதங்களில் செய்துள்ளது. 

சார்ந்த செய்திகள்