தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி ஏப்ரல் மாதம் முடியும் நிலையில் உள்ளது. இதனால் திமுக, அதிமுக கட்சிகளில் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு கடும் போட்டி நிலவி வருவதாக கூறுகின்றனர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வுக்கு புதிதாக தலா 3 எம்.பி. பதவிகள் கிடைக்க உள்ளது. அந்த இடங்களுக்கு இரண்டு கட்சியிலும் நிர்வாகிகள் மத்தியில் போட்டி உருவாகி வருகிறது. ஆளும்கட்சியில் தன் ஆதரவாளர்களுக்கு 3 சீட்டையும் ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி விரும்பவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்றையாவது தன் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். எதிர்பார்க்கிறார் என்கின்றனர்.
இந்த நிலையில், த.மா.கா. தலைவர் வாசன், அ.தி.மு.க. தரப்பிலிருந்து ஒரு சீட்டை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் டெல்லிக்கு நீங்கள் வர வேண்டியிருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்கனவே அவரிடம் சொன்னதால், விரைவில் டெல்லிக்குப் போகிறார் வாசன். இந்த பயணத்தின்போது, தனது ராஜ்யசபா சீட் குறித்து அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கும்படி பா.ஜ.க. தரப்பிடம் அவர் கேட்கலாம் என்று சொல்லப்படுகிறது. தி.மு.க.வோ மூன்று சீட்டிலும் தங்கள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களையே உட்காரவைக்கும் முடிவில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.