தமிழகம் முழுவதும் அணைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை மிக தீவிரமாக செய்துக் கொண்டிருக்கின்றனர் .இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ .பி.எஸ் இருவரும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் , கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் . இதில் இ .பி. எஸ் அவர்கள் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து தருமபுரி தொகுதியில் பிரச்சாரம் செய்தார் அப்போது கிருஷ்ணகிரி வழியாக வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றார் . முதல்வர் என்பதால் பிரச்சாரம் செய்யக் கூடிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடுவதற்கு முன்னதாகவே காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது .
முதல்வர் வருவருவதால் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் , அதிமுக நிர்வாகிகளும் அவரை வரவேற்க திரண்டு சென்றனர் . ஆனால் இந்த தொகுதியில் போட்டியிடும் கே.பி . முனுசாமிக்கு எடப்பாடி இந்த வழியாக தான் வருகிறார் என்று எந்த தகவலும் இல்லையாம் .கடைசியில் முதல்வர் வருவதை அறிந்த முனுசாமி அவரது காரை பின் தொடர்ந்து திருப்பத்தூர் வரைக்கும் சென்று நேரில் வரவேற்றார் . இது சம்மந்தமாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது முனுசாமி அவர்கள் ஓ.பி.எஸ் அணியில் இருந்ததால் இ.பி. எஸ் அவருக்கு பிரச்சாரம் செய்வதை தவிர்த்து வருகிறார் அதோடு இல்லாமல் அவரது பிரச்சாரப் பயண தகவலும் சொல்லவில்லை என்று கூறுகின்றனர் . என்ன தான் ஓ.பி.எஸ் மற்றும் இ .பி . எஸ் அணிகள் இணைந்தாலும் இன்னும் கட்சிக்குள் அந்த இரு அணிகளும் மனதளவில் ஒன்றாக இணையவில்லை . இதனால் தேர்தல் நேரத்தில் அதிகமாக கோஷ்டி பூசல் வருவதற்கு வாய்ப்பு அதிகமாகும் இந்த பூசல் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலை பாதிக்கும் என்றும் சில கட்சி நிர்வாகிகள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர் .